News September 8, 2025
திண்டுக்கல்: தமிழ் தெரியுமா? ரூ.70,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News September 10, 2025
கனரா வங்கி சார்பில் பழுது பார்த்தல் பயிற்சி

திண்டுக்கல் அருகே நத்தம் சாலையில், சிறுமலை பிரிவு பகுதியில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கான வீட்டு உபயோகபொருட்கள் பழுது பார்த்தல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இந்தபயிற்சி வகுப்பு வருகிற 20-ந்தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் கனரா வங்கியின் பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
News September 10, 2025
திண்டுக்கல் கோவிலில் துணை ஜனாதிபதி சாமி தரிசனம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் இன்று துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மீண்டும் அதே கோவிலுக்கு வருகை தந்து சி.பி. ராதாகிருஷ்ணன் அபிராமி அம்மனை தரிசனம் செய்தார்.
News September 10, 2025
திண்டுக்கல்லில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்

திண்டுக்கல்: இன்று செப்.10 உங்களுடன் ஸ்டாலின் முகாம் திண்டுக்கல் மாநகராட்சி வத்தலகுண்டுரோடு மதினா மண்டபம் பிரியாநகர், நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி மஞ்சநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ரெட்டியார்சத்திரம் சுள்ளெறும்பு சமுதாயக்கூடம், ஒட்டன்சத்திரம் பட்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முகாமினை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.