News September 8, 2025
திருப்பூரில் இலவச Tally பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GSTபயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News November 7, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

திருப்பூர், ஊத்துக்குளி அருகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மைலால் (55). அவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மைலால் வேலைக்கு செல்வதற்காக புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
திருப்பூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)
News November 7, 2025
திருப்பூரில் நாளை விடுமுறை இல்லை

திருப்பூர் மாவட்டத்தில் நாளை(நவ.8) பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த அக். 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி வாரத்தில் அக்.22ம் தேதி, மழை காரணமாக திருப்பூர் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன்படி நாளை (8-ம் தேதி) திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை கூறியுள்ளது.


