News September 8, 2025

விழுப்புரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

Similar News

News September 9, 2025

விழுப்புரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 9) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 9, 2025

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய நபர் கைது

image

விழுப்புரம் அண்ணா நகர் பகுதியில் ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த சபாபதி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

News September 9, 2025

ஜனநாயக கடமை ஆற்றிய விழுப்புரம் எம்பி

image

டெல்லியில் இன்று செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் துவங்கிய துணை ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப் பதிவில் விழுப்புரம் நாடாளுமன்ற எம்பி துரை ரவிக்குமார் வரிசையில் நின்று ஓட்டளித்தார். மாலை 5 மணியுடன் முடியும் வாக்குப்பதிவுக்கு பின் ஓட்டு எண்ணிக்கை ஆறு மணி அளவில் துவங்கி நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!