News September 8, 2025
தவறாக பேசினால் ஆசிட் ஊற்றுவேன்: TMC தலைவர்

வாங்காள மக்களை வெளிநாட்டினர் என சித்தரித்தால் பாஜக MLA வாயில் ஆசிட் ஊற்றுவேன் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹீம் பஷி பேசியுள்ளார். மேற்கு வங்காலத்திருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் என பாஜக MLA ஷங்கர் கோஷ் தெரிவித்த கருத்துக்கு, பதிலடியாக இந்த எச்சரிக்கையை அவர் கொடுத்துள்ளார். பஷியின் கருத்துக்கு BJP-வும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.
Similar News
News September 9, 2025
பிரதமரை வீட்டுக்கு அனுப்பிய #NepoKid ஹாஷ்டேக்

நேபாளத்தில் நடந்துவரும் <<17657502>>போராட்டத்தின்<<>> உந்து சக்தியாக இருப்பது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் #NepoKid, #NepoBabies, #PoliticiansNepoBaby போன்ற ஹாஷ்டேக்ஸ் தான். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் குழந்தைகள் வசதியாக வெளிநாட்டுக்கு சென்றுபடித்து செட்டில் ஆகிவிடுவதாகவும், நாட்டில் உள்ள சாதாரண மக்களின் பிள்ளைகள் இங்கு படித்துவிட்டு வேலைக் கிடைக்காமல் வாடுவதாகவும் அந்த ஹேஷ்டேக்குகளில் பதிவுகள் வைரலாகின.
News September 9, 2025
விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த அண்ணாமலை

நாங்களே மாற்று என்று சொல்லும் விஜய், சனிக்கிழமைகளில் மட்டும் பரப்புரை செய்வேன் என்பது ஏற்கத்தக்கதல்ல என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். பார்ட் டைம் அரசியல்வாதியாக இருக்கக்கூடாது; அரசியல் செய்வோர் முழுநேரமாக அரசியலில் பணியாற்ற வேண்டும் என்றும், திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் வேலை செய்ய மாட்டேன் என சொல்லக்கூடாது எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
News September 9, 2025
தனுஷின் முதுகில் குத்த விரும்பாத ஜிவி

தனுஷ் படங்களுக்கு இசையமைக்கும் உங்களுக்கு, தனுஷுடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதா என ஜி.வி.பிரகாஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ராயன்’ படத்தில் தனது தம்பியாக நடிக்க தனுஷ் கேட்டதாகவும், ஆனால், அது அவரை முதுகில் குத்தும் கதாபாத்திரம் என்பதால் நடிக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.