News September 8, 2025

BREAKING: தர்மபுரி: பெண் சடலம் மீட்பு – வரதட்சனை கொடுமையா?

image

தர்மபுரி: நல்லம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்ற பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2019-ல் காதல் திருமணம் செய்த நிலையில், அவரது கணவர் பரத், வரதட்சணை கேட்டு ஸ்ரீபிரியாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரை கொலை செய்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஸ்ரீபிரியா வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக, பரத் அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Similar News

News September 10, 2025

தர்மபுரியில் கல்விக்கடன் முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் வருகின்ற 12ம் தேதி அன்று குண்டல்பட்டி கிராமம், வருவான் வடிவேலன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் செப் .11 ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள் வெளியிட்டுள்ளது. தருமபுரி என்.கே திருமண மண்டபம் சத்யா நகர், பி. மல்லாபுரம் சமுதாயக்கூடம் சந்தை தெரு, பாப்பிரெட்டிப்பட்டி விபிஆர்சி கட்டிடம் பட்டுக்கோணம்பட்டி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காரிமங்கலம் சமுதாயக்கூடம் பெரியாம்பட்டி, அரூர் செந்தூர்மஹால் செட்ரப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

News September 10, 2025

லாட்டரி விற்ற 5 பேர் கைது

image

இன்று காரிமங்கலம் டவுன் பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ் ஐ சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஜீவா 27, வசந்த் 32, சுரேஷ் 41, முனியப்பன் 33, தமிழ்செல்வன் 45 ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.2500 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!