News September 8, 2025
வைகோவின் போலி நாடகம்: மல்லை சத்யா கடும் தாக்கு

ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் ஆலோசித்து மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார் வைகோ. இதற்கு, ஒழுங்கு நடவடிக்கை குழு என ஒன்று இல்லாத போது, எந்த குழுவை வைத்து இந்த நடவடிக்கையை வைகோ எடுத்துள்ளார் என சத்யா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன்னை நீக்கும் தீர்ப்பை முன்கூட்டியே எழுதிய வைகோ போலியான விசாரணை நாடகம் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
செப்.13-ல் இளையராஜாவுக்கு TN அரசு பாராட்டு விழா

இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி லண்டனில் அரங்கேறியது. இந்த நிலையில்தான், அவரை பாராட்டி வரும் 13-ம் தேதி TN அரசு சார்பில் சிறப்பு பாராட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டு நிகழ்வில் வெளிநாட்டு கலைஞர்களுடன் இளையராஜாவின் சிம்பொனி கச்சேரியும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
2026 தேர்தல்: முதல் பட்டியலை வெளியிட்டார் விஜய்

TVK தலைவர் விஜய்யின் தமிழக சுற்றுப்பயணம் வரும் 13-ம் தேதி தொடங்கி டிச.20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வாரத்திற்கு ஒருமுறை என சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை அந்தந்த மாவட்டங்களில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கு காவல்துறை முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படும் நிலையில், அனுமதி வேண்டி அட்டவணையை டிஜிபி அலுவலகத்தில் N.ஆனந்த் சமர்பித்துள்ளார். இது விஜய்யின் முதல் அரசியல் சுற்றுப்பயணமாகும்.
News September 9, 2025
சற்றுமுன்: இபிஎஸ் உடன் இணைந்தனர்

ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பொறுப்பில் இருந்து விலகியதாக கூறப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று சேலத்தில் EPS-ஐ நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோபி அதிமுக நகர செயலாளர் கணேஷ், கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேலு தலைமையில் கோபி, அந்தியூர், பவானிசாகர் பகுதியை சேர்ந்த பலரும் மீண்டும் EPS-ன் பக்கம் திரும்பியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.