News September 8, 2025
திருச்சி: சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க கோரிக்கை

திருச்சி – தாம்பரம் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன. இதனால், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே இந்த சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 9, 2025
திருச்சி: விரைவு ரயில் ரத்து?

பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை – திருச்சி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை – திருச்சி விரைவு ரயிலானது செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் இம்மாதம் 16, 23, 30 ஆகிய தேதிகளில் மட்டும் மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
திருச்சி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

திருச்சி மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதல் ,டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதல், எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் 9498794987 என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 9, 2025
திருச்சி: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <