News April 10, 2024
அரியலூர் ஆட்சியர் அதிரடி ஆய்வு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News February 4, 2026
அரியலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13ந்தேதி நடைபெறவுள்ளது. மாலை 3.30 மணிக்கு அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ள இம்முகாமில், முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
அரியலூர்: பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீசார் பாப்பாக்குடி மேம்பாலத்தின் கீழே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாகசகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட போலீசார், நால்வரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
News February 4, 2026
இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்03) இரவு 10 முதல் இன்று (பிப்04) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


