News September 8, 2025
தஞ்சாவூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தஞ்சை மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <
Similar News
News September 9, 2025
தஞ்சாவூர்: 999.64 கிலோ கஞ்சா பொருள்கள் எரிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டி மெடி கேர் என்விரோ சிஸ்டம் எனப்படும் மருத்துவக் கழிவு பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் முன்னிலையில் 999.64 கிலோ பொருள்களை இன்று எரியூட்டி போலீஸார் அழித்தனர். தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். இராஜாராம், துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்டம், கும்பகோணம் மாநகரம் 2 வது பகுதி, 8 வது வட்டம் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வார்டு அவைத் தலைவர் அழகர்சாமி தலைமையில், மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப. தமிழழகன் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்புரை தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் இதில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
News September 9, 2025
தஞ்சாவூர்: தலையை துண்டாக வெட்டி படுகொலை

தஞ்சாவூர் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சசி (20). ஆட்டோ ஓட்டுநரான இவரை இன்று காலை தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் பட்டப் பகலில் மர்ம நபர்கள் தலையை துண்டாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவலறிந்த தஞ்சாவூர் தாலுக்கா காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.