News September 8, 2025

தி.மலையில் 30 ஆட்டோக்கள் பறிமுதல்

image

திருவண்ணாமலை நகரில் நேற்று (செப்டம்பர் 07) பௌர்ணமி தினத்தை ஒட்டி உரிய ஆவணங்கள் இன்றி ஏராளமான ஆட்டோக்கள் இயங்கின. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. தொடர்ந்து கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி தலைமையிலான அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது ஆவணம் இன்றி இயங்கிய 30 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News September 9, 2025

தி.மலை: உள்ளூரில் அரசு வேலை

image

தி.மலை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில், ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், ஜவ்வாதுமலை, போளூர், தெள்ளார், திருவண்ணாமலை, வந்தவாசி, வெம்பாக்கம் மேற்கு ஆரணி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர், மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News September 9, 2025

BREAKING: தி.மலை- மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

தி.மலை மாவட்டம் சின்னக்காயம்பட்டு கிராமத்தில் மின் கம்பம் பழுதுபார்க்க சென்ற சேகர் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஒருவரின் நிலத்திற்கு மின் தடை ஏற்பட்டதால் அதை சரிசெய்ய சென்றபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எண்ணி கம்பியை தொட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது. குறிப்பிட்ட மின் கம்பத்திற்கான டிரான்ஸ்ஃபார்மருக்கு பதிலாக, வேறு டிரான்ஸ்ஃபார்மரை அணைத்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

News September 9, 2025

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க செம வாய்ப்பு

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!