News September 8, 2025

பந்தலூர் அருகே கேரள அரசு பஸ் மோதி இளைஞர் பலி

image

பந்தலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் இன்று காலை வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவர் சென்ற வழியில் வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட அரசு பஸ் எதிர்பாரத விதமாக மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முதல் கட்ட விசாரணையில் உள்ளனர்.

Similar News

News September 9, 2025

துணை முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள்!

image

சென்னையில் உள்ள துணை முதல்வர் இல்லத்தில் நீலகிரி மாவட்ட திமுக அமைப்பாளர்கள் சந்தித்தனர் . நீலகிரி மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஹெச் சையத் மஞ்சூர் குன்னூர் நகர முப்பது வார்டுகளில் உள்ள 30 கிளைகளின் இளைஞர் அணி மற்றும் துணை அமைப்பாளர்கள் படிவ பட்டியலை தமிழக துணை முதலமைச்சரிடம் வழங்கினர்.

News September 9, 2025

நீலகிரியில் யானை மிதித்துக் கொன்றதால் மறியல் !

image

கூடலூர் ஓவேலி பார்வுட் பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் சம்சுதீன் என்ற தொழிலாளி பலியானதால், அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி யானை மனித மோதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதுவரை வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இந்நிலையில் போலீசார் இவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

News September 9, 2025

நீலகிரி: தவெக விஜய் வருகை!

image

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் அக்.4ஆம் தேதி நீலகிரிக்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

error: Content is protected !!