News September 8, 2025
பழமுதிர்சோலையில் தவில், நாதஸ்வரம் பயிற்சி

அழகர் கோவிலில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மூன்றாண்டுகள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி , வயது 13 முதல் 20 வயதிற்குள் உள்ள இந்து மதத்தினை சேர்ந்த ஆண் பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். *ஷேர்
Similar News
News September 9, 2025
கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்கா இன்று சந்தனக்கூடு உருஷ் மத நல்லிணக்க விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, இந்த நிகழ்ச்சி தொடக்கமாக இன்று மாலை உருஷ் விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு மின்சார விலங்குகளால் அலங்காரத்துடன் மேலதாளம் வாத்தியம், ஒட்டக நாட்டிய, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து தர்காவை அதிகாலை வந்தடையும்.
News September 9, 2025
மதுரை: கொட்டி கிடக்கும் வேலைவாய்புகள்

மதுரை மக்களே,
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 9, 2025
கோரிப்பாளையத்தில் இருந்து சிலைகள் இடமாற்றம்

மதுரை, கோரிப்பாளையத்தில் மேம்பாலம், சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் அப்பகுதியிலுள்ள 6 சிலைகள் வெவ்வேறு இடங்களில் மாற்றியமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த கனகவேல் பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பு இதனை தெரிவித்துள்ளது.