News September 8, 2025
கட்சியிலிருந்து நீக்கம்; மல்லை சத்யா ரியாக்ஷன்

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர், இதுபற்றி தான் கவலைப்படவில்லை; வைகோதான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வைகோ தனது மகன் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News September 9, 2025
தவெகவில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்?

சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக தவெகவில் நியமிக்கப்பட்டார். பாஜகவின் காண்டாக்டுகளை வைத்திருக்கும் இவர், தவெகவின் ஒவ்வொரு நகர்வையும் உடனுக்குடன் பாஜகவிற்கு தெரிவித்துவருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்க EPS-ஐ அவர் ரகசியமாக சந்தித்தாக கூறப்படும் தகவல்கள் பனையூரை பதறவைத்திருக்கிறதாம்.
News September 9, 2025
IOC-ல் 537 வேலை வாய்ப்புகள்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள 537 தொழிற்பயிற்சி இடங்களுக்கான (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு பதவிக்கு ஏற்றார்போல் உதவித்தொகையும் வழங்கப்படும். கல்வித்தகுதி: +2, ITI. வயது வரம்பு: 18 – 24. மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.18. இதுகுறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 9, 2025
உடல் எடை குறைய இந்த மூலிகை தேநீர் தான் பெஸ்ட்!

எடை குறையவும், தேவையற்ற சதையைக் கரையவும் பெருஞ்சீரக லெமன் டீ தான் பெஸ்ட் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
*இஞ்சியை தோல் சீவி பாதியாக தட்டி எடுத்துக் கொள்ளவும். பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும். வெந்நீரில் இந்த இரண்டையும் சேர்ந்து நன்கு கொதித்த பிறகு, இறக்கி வடிகட்டவும். இதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்தால், பெருஞ்சீரக தேநீர் ரெடி. SHARE IT.