News September 8, 2025

வேலூர்: இருசக்கர வாகன விபத்து

image

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே, தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த மினி டாடா ஏஸ் மீது, இன்று (செப்.8) காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 9, 2025

வேலூர் இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

image

வேலூர் மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், வங்கியில் ரூ.10 – 20 லட்சம் வரை கடன் பெற்று, சொந்தமாக உழவர் நல சேவை மையத்தை அமைக்கலாம். SHARE பண்ணுங்க

News September 9, 2025

வேலூர்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

image

வேலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<>உங்களுடன் ஸ்டாலின்<<>>’ முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News September 9, 2025

வேலூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், வரும் செப்டம்பர் 11-ம் தேதி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள “காயிதே மில்லத்” கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, இன்று (செப்.9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!