News September 8, 2025

நாகை: உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா இன்று (செப்டம்பர் 8) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், இன்று மாநில அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 20 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 9, 2025

நாகை: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

image

நாகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் <>இங்கே க்ளிக் செய்து<<>> Register பண்ணுங்க. இப்பணிக்கு மாதம் ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

நாகை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நாகப்பட்டினம், 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (செப்.10) புதன் அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்து, பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

நாகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!