News September 8, 2025
பெரம்பலூர்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 9.9.2025 நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் , குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என
பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் அசோக் குமார் தகவல்.
Similar News
News September 10, 2025
காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான திருச்சி, திருச்சி மாநகரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று (செப்.,9) பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.
News September 9, 2025
பெரம்பலூரில் ஜாக்டோ – ஜியோ சார்பில் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில், (செப்டம்பர் 09- 2025 ) நேற்று ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்கள். பிறகு அனைவரும் சேர்ந்து கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்று மனு கொடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
News September 9, 2025
பெரம்பலூரில் இந்த தேதியை குறித்து வைச்சிக்கோங்க!

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் பயன் பெற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியவர்கள் பங்கு பெற்று தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். நடைபெறும் நாள் ( 10.09.2025 ) குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. முதிவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம். SHARE பண்ணுங்க