News September 8, 2025
வேளாண் விஞ்ஞானி R.S.நாராயணன் காலமானார்

இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான R.S.நாராயணன்(87) வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் ஆய்வாளராக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். மேலும், ‘வறட்சியிலும் வளமை’, ‘வாழ்வு தரும் வன வேளாண்மை’, ‘பல்லுயிர் பெருக்கம்’ உள்ளிட்ட ஏராளமான பயனுள்ள நூல்களை எழுதியுள்ளார். இறுதி சடங்கு பிற்பகல் 12 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது. #RIP
Similar News
News September 9, 2025
தோனியின் ஒன் லைன் மந்திரம் இதுதான்

சர்வதேச போட்டிகளில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றாலும், தோனியின் விளையாட்டு நுட்பங்கள் இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், CSK வீரர் நூர் அகமது தோனி பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ‘சூழ்நிலையை அறிந்துகொண்டு, அதற்கு தேவையானதைச் செய்’ என்றே தோனி அறிவுறுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், IPL-ல் ஆட்ட நாயகன் விருது வென்றதை விட MSD-ன் கீழ் விளையாடியதே சிறந்தது என்றார்.
News September 9, 2025
விலை குறைப்பு.. அரசு புதிய அறிவிப்பு

GST குறைப்பால் கார், டூ வீலர் உள்ளிட்டவை எவ்வளவு விலை குறைகிறது என கடைகளின் முன் விலை பட்டியலை விளம்பரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. PM மோடியின் போட்டோவுடன் இந்த விளம்பரங்கள் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. விலை குறித்து மக்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தாலும், PM மோடியின் படம் இருக்க வேண்டும் என்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News September 9, 2025
உடல் எடையை குறைக்க இந்த இட்லி தான் பெஸ்ட்!

உடல் எடையை குறையவும், செரிமானம் மேமப்படவும் குதிரைவாலி இட்லி உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
*குதிரைவாலி அரிசியை தனியாகவும், உளுந்து, வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவையுங்கள்.
*இவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து 8 மணி நேரம் வரை புளிக்க வையுங்கள்.
*இந்த மாவில் உப்பு சேர்த்து, இட்லித் தட்டுகளில் ஊற்றினால், ஆவி பறக்க பறக்க இட்லி ரெடி! நண்பர்களுக்கும் Share பண்ணுங்க!