News September 8, 2025
விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. செஞ்சியில் 41 மி.மீ. மழையும், வல்லத்தில் 34 மி.மீ. மழையும் பெய்தது. முண்டியம்பாக்கத்தில் 23 மி.மீ., நேமூர், அனந்தபுரத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. கோலியனூரில் 17 மி.மீ. மழையும், வளவனூரில் 16 மி.மீ. மழையும், கெடாரில் 14 மி.மீ. மழையும், திண்டிவனத்தில் 12 மி.மீ. மழையும் பதிவானது. வானூரில் 9 மி.மீ.,விழுப்புரத்தில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Similar News
News September 9, 2025
விழுப்புரம்: பயணிகள் கவனத்திற்கு

பராமரிப்புப் பணி நடப்பதால், விழுப்புரம் – சென்னை கடற்கரை சிறப்பு ரயில் (வண்டி எண் 66046) பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 13, 20, 27 ஆகிய தேதிகளில் இந்த ரயில் விழுப்புரத்திற்குப் பதிலாக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:55 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News September 9, 2025
விழுப்புரம்: இ-ஸ்கூட்டர் வாங்க செம வாய்ப்பு

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 9, 2025
விழுப்புரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.