News September 8, 2025

EPS காய் நகர்த்தலுக்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு

image

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என EPS பேசியிருந்தார். இதற்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓட்டை உடைசல்களை EPS சரி செய்துவிட்டு மற்றதைப் பற்றி யோசிக்கலாம் என விமர்சித்துள்ளார். இப்படியே சென்றால் EPS-ன் அரசியல் வாழ்க்கை ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ என்ற நிலைக்கு செல்லும் எனவும் சாடியுள்ளார்.

Similar News

News September 9, 2025

செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமியின் அருளைப் பெற..

image

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்
பொருள்:
மகாலட்சுமியே, உங்கள் இருப்பை உணர்கிறேன் விஷ்ணுவின் அன்புக்குரியவரான உங்களை தியானிக்கிறேன்!
என்னை செழிப்பாக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன். SHARE IT.

News September 9, 2025

திமுக 200, அதிமுக 210.. தேர்தல் களம் சூடுபிடித்தது

image

2026 தேர்தலுக்காக ஏதோ ஒரு நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பு முடிவுகள் என நினைக்காதீங்க. திமுக, அதிமுக தலைவர்களின் வெற்றிக்கான ஆருடம் இது. இத்தனை நாள்களாக <<14952930>>திமுக 200 <<>>தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறிவந்த நிலையில், அதிமுக <<17645097>>210 தொகுதிகளில் வெற்றி<<>> என EPS, புதிதாக கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் விஜய் 150 தொகுதிகளை குறிவைத்துள்ளாராம். இதில், யாருடைய வியூகம் பலிக்கும்?

News September 9, 2025

11 மாவட்டங்களில் கனமழை அலர்ட்

image

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

error: Content is protected !!