News September 8, 2025
ராணிப்பேட்டை உங்களுடன் ஸ்டாலின் முகாமின் விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் நாளை 09.09.2025 “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் அரக்கோணம் TN நகர், டி. என். நாராயணசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெறும். பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து தீர்வு காண்பதே இம்முகாமின் நோக்கமாகும். மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
Similar News
News September 9, 2025
பொதுமக்களிடம் மோசடி செய்த வாலிபர் கைது

ஆற்காடு ஏரிக் கீழ் தெருவில் சேது என்பவர் ஆற்காடு, மேல்விஷாரம்,ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கித் தருவதாக கூறி பான்கார்டு, ஆதார்கார்டு போன்ற விவரங்களை வாங்கி கையொப்பமும் வாங்கிக்கொண்டு நிறுவனங்களில் பொருட்களை வாங்கி விற்று தவணையை கட்டாமல் இருந்துள்ளார். நிறுவன உரிமையாளர்களிடம் சென்று விசாரித்த போது அவர்கள் உண்மையை கூற சேதுவை போலீசார் கைது செய்தனர்.
News September 8, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப் -08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News September 8, 2025
நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டிலான 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை 50% மானியத்துடன் அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் சந்திரகலா,தோட்டக்கலை துணை இயக்குனர் சிந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.