News September 8, 2025
தி.மலை: பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

2025 ஆம் ஆண்டின் 3-ம் காலாண்டிற்கான, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (தாக்அதாலத்), திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அஞ்சல் துறை சார்ந்த தங்கள் குறைகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக 12.9.2025 க்குள் அனுப்பி வைக்கலாம் என தி.மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
“கிராம உதவியாளா் பணிகளுக்கான திறனறிவுத் தோ்வு”

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கான திறனறிவுத் தோ்வு (செப்.08) தொடங்கியது. “இதில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் முதற்கட்டமாக வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தோ்வு வட்டாட்சியா் சு.மோகனராமன் முன்னிலையில் தொடங்கியது. இந்த தோ்வுப் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். முதற்கட்டமான தோ்வு வரும் செப். 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
News September 9, 2025
தி.மலையில் மக்கள் குறைதீா் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் (செப்.08) நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 566 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம்
வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
News September 9, 2025
தி.மலை: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே<