News September 8, 2025
BREAKING: தாம்பரம் அருகே விபத்து 2 பேர் பலி

தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அவரது தோழி அபிமணி என்பது தெரியவந்தது. இவ்விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Similar News
News September 9, 2025
செங்கல்பட்டு: கேன் வாட்டர் குடிக்கிறீங்களா! அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள கேன் வாட்டர் ஆலைகளை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும், விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றனர். மக்களே, கேன் வாட்டர் வாங்கும் போது செக் பண்ணி வாங்குங்க. (SHARE)
News September 9, 2025
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை

ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், செங்கல்பட்டு மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். (ஷேர் பண்ணுங்க)
News September 9, 2025
செங்கல்பட்டு: whats App இருக்கா உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை whats App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்தத் துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.