News September 8, 2025

சைபர் மோசடியில் சிக்காதீர்கள் – காவல்துறை எச்சரிக்கை

image

மதுரை மாநகர் காவல்துறை சைபர் குற்ற எச்சரிக்கை: அந்நியர்களிடமிருந்து வரும் வீடியோ சாட் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம். அவை பதிவு செய்து பிளாக்மெயிலுக்கு பயன்படுத்தப்படலாம். அசிங்கமான புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர வேண்டாம். சந்தேகத்திற்கிடமான சாட், படங்கள் வந்தால் பதில் அளிக்காதீர்கள். சம்பவங்களை போலீசாரிடம் புகாரளிக்கவும். சமூக வலைதளங்களில் தனியுரிமை அமைப்புகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 9, 2025

கோரிப்பாளையத்தில் இருந்து சிலைகள் இடமாற்றம்

image

மதுரை, கோரிப்பாளையத்தில் மேம்பாலம், சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் அப்பகுதியிலுள்ள 6 சிலைகள் வெவ்வேறு இடங்களில் மாற்றியமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த கனகவேல் பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பு இதனை தெரிவித்துள்ளது.

News September 8, 2025

மதுரை: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி APPLY NOW.!

image

மதுரை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு<> இங்கே க்ளிக் செய்யவும்<<>>. இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

மதுரை விமானநிலையம் பெயர் மாற்றம் – 2 கட்சிகள் எதிர்ப்பு

image

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார். இந்நிலையில், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து 2 கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கடசித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் இபிஎஸ் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, இமானுவேல் சேகரனார் பெயர் சுட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.

error: Content is protected !!