News September 8, 2025

குமரி: சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேவையுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

Similar News

News September 9, 2025

குமரி: சிறுவன் அடித்துக் கொலை; தீவிர தேடுதல்

image

குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வி மகான் அபிநவ் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதில் தாயார் செல்வி மாயமான நிலையில் அவருடன் வாழ்ந்து வந்த செல்வ மதன் என்பவர் சிறுவனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 2 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுவனின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள நிலையில் அதனை வாங்க கடந்த 7 நாட்களாக யாரும் முன் வரவில்லை.

News September 9, 2025

குமரி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

image

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT

News September 9, 2025

குழித்துறையில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செப்.11 அன்று நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை, புத்தன்துறை, கிள்ளியூர், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!