News September 8, 2025
செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

செங்கல்பட்டு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
Similar News
News September 9, 2025
குடிநீர் ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் 3 குழுவாக பிரிந்து குடிநீர் தயாரிக்கப்படும் ஆலைகளில் குடிநீர் தயாரிக்கப்படும் தேதி, குடிநீர் காலாவதியாகும் தேதி, மற்றும் கடைகளில் விற்கப்படும் கேன் குடிநீர் ஆகியவற்றை ஆய்வு செய்ய உத்தரவு.
News September 8, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.
News September 8, 2025
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை- உஷார்!

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை எடுத்துள்ளது. நாளை (செப்.9) நாளை மறுநாள்( செப்.10) ஆகிய 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.