News September 8, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுகவில் உள்கட்சி பிரச்னை ஒருபுறம் இருக்க அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் அதிருப்தியில் உள்ளோரை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி கச்சிதமாக காய்நகர்த்தி வருகிறார். அந்த வகையில், கரூரில் ADMK, BJP, DMDK-வில் இருந்து விலகிய பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவர் ஒருவரை இணைக்க செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளாராம்.
Similar News
News September 9, 2025
சமூக வலைதளங்களுக்கு விதித்த தடை நீக்கம்

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை அந்நாட்டு அரசு நீக்கியது. 26 சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை கண்டித்து காட்மாண்டுவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து 19 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு அமைச்சரவை அவசரமாக கூடி சமூக வலைதளங்களுக்கான தடையை நீக்கியுள்ளது. இதை IT அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
News September 9, 2025
நுண்சிலை செய்த பொன்சிலையே அதுல்யா

காந்த கண்களால் கவர்ந்திழுக்கும் அதுல்யா ரவி, இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்களால் ரசிகர்கள் ‘நான் ஈ’ படத்தின் வீசும் வெளிச்சத்திலே பாடலை பாடத் தொடங்கியுள்ளனர். எந்த லுக்கிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை இந்த புகைப்படங்கள் மூலம் அதுல்யா உணர்த்துகிறார். நாடோடிகள் 2, கடாவர், அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த அவர், தற்போது டீசல் படத்தின் ரிலீசிற்காக காத்திருக்கிறார்.
News September 9, 2025
இந்தியாவில் அதிகரிக்கும் செல்போன் திருட்டு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செல்போன் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பது போல் அவை திருடப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் டெல்லியில் 8.38 லட்சம் போன்கள் திருடப்பட்டுள்ளன. செல்போன் திருட்டில் டெல்லிக்கு அடுத்து கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. குறிப்பாக டெல்லியில் செல்போனை தொலைத்த 100 பேரில் 2 பேருக்கு மட்டுமே அது திருப்பி கிடைத்துள்ளது.