News September 8, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையம்

தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில், சிறந்த காவல் நிலையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும், முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலையம், 2023 ஆம் ஆண்டிற்கான, சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதலமைச்சரின் கேடயம் பெற்றது. கேடயத்தை கமுதி, சார்புஆய்வாளர் சக்திகணேஷ், பெற்றுக்கொண்டார்.
Similar News
News September 9, 2025
இராமநாதபுரத்தில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

இராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் (காவிரி), தலைமையிடமான முத்தரசநல்லூரில் மின்சார வாரியத்தால் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்களுக்கு, குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். *ஷேர் பண்ணுங்க
News September 9, 2025
இலவச வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்குதல் பயிற்சி

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மருத்துவமனை எதிரில் உள்ள சிகில்ராஜ தெரு, சாந்த்பீவி காம்ப்ளக்ஸ் 2-வது தளம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுய ஊரக வேலைவாய்ப்பு மையம் இணைந்து நடத்தும், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக நடத்தப்பட உள்ளது. பயற்சி ஆரம்பிக்கப்படும் நாள் (செப்.15) பயிற்சி நாட்கள்: 30. பயிற்சி நேரம்: 9.30 AM – 5.00 PM . முன்பதிவு அவசியம்: தொடர்புக்கு: 9087260074
News September 8, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (செப்டம்பர்.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.