News September 8, 2025
திருப்பத்தூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
Similar News
News September 9, 2025
திருப்பத்தூர்: உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் துவக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் அடிப்படையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்ப படிவத்தை மாவட்ட https:/tirupathurnicin வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-வது தளம், B பிளாக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
News September 9, 2025
திருப்பத்தூர்: டிராக்டர் மீது பைக் மோதி விபத்து

மாதனூர் ஒன்றியம் குப்புராஜ் பாளையம் பகுதியில் (நேற்று செப்டம்பர் 8 இரவு) செங்கல் சூளைக்கு விறகு ஏற்றி சென்ற டிராக்டர் மீது குப்புராஜபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் வயது (22) கூலி தொழிலாளியின் பைக் டிராக்டர் மீது மோதிகியது. இந்த விபத்தில் சதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உம்ராபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News September 9, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆம்பூர் நகராட்சி வார்டு 30 திருப்பத்தூர் ஒன்றியம் டி.கிருஷ்ணாபுரம், குரும்பகேரி ஊராட்சிகள் ஜோலார்பேட்டை செட்டியப்பனூர் ஊராட்சி, கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி, சின்ன கசிநாயக்கன்பட்டி ஊராட்சிகள் மாதனூர் கண்ணாடி குப்பம், விண்ணமங்கலம் ஊராட்சிகள் நாட்றம்பள்ளி, நாராயணபுரம் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் இன்று(செப்.9) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.