News September 8, 2025
கள்ளக்குறிச்சி: குடிநீர் பிரச்னையா…? இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தொடர்ச்சியாக இருக்கிறதா…? சரியான நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறீர்களா…? யாரிடம் புகார் அளித்தும் இதறகான சரியான பதில் கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இந்த நம்பர் (04151-222002) க்கு கால் பண்ணி உங்க புகாரை பதிவு பண்ணுங்க உங்க பிரச்சனைக்கு கண்டிப்பா ஒரு தீர்வு குடுப்பாங்க. இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News September 8, 2025
கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் கல்வராயன்மலையில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்
குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (08.09.2025) நடைபெற்றது.
News September 8, 2025
ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், 2025-26ஆம் ஆண்டு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற்ற, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (08.09.2025) திங்கள் கிழமை நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் உடன் இருந்தார்.
News September 8, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (08.09.2025) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினார்.