News September 8, 2025

BREAKING: செங்கோட்டையன் இன்று டெல்லி பயணம்

image

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட Ex அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று காலை டெல்லி செல்கிறார். அங்கு, பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அதிமுக ஒன்றிணைப்பு விவகாரத்தில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்திருந்த நிலையில், இன்று மீண்டும் டெல்லி செல்லவுள்ளது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 9, 2025

மியான்மரின் ஆங் சான் சூ கி கவலைக்கிடம்

image

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் ஆங் சான் சூ கி, மோசடி குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். இந்நிலையில், அவருக்கு இருதய பாதிப்பு உள்ளதாக அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், தனது தாய் உயிருடன் இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், ஆங் சான் சூ கி நலமுடனே உள்ளதாக அந்நாட்டு ராணுவ அரசு விளக்கமளித்தது.

News September 9, 2025

CM தலைமையில் மா.செ., கூட்டம்.. பின்னணி என்ன?

image

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொள்ளும் CM, DMK முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்க உள்ளார். இதோடு, தேர்தல் நெருங்குவதால் தங்கள் தொகுதிகளில் முடிக்க வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த உள்ளதாகவும், தொகுதிகளின் நிலவரங்களை கேட்டறிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News September 9, 2025

நேபாளம் போராட்டம்: விசாரணைக் குழு அமைப்பு

image

நேபாளத்தில் FB, Insta உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்ற Gen Z தலைமுறையினரின் போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அதற்கான தடை விலக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்த அந்நாட்டு PM ஷர்மா ஒலி, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு, 15 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!