News September 8, 2025
தி.மலை: கஞ்சா தகராறு – இளைஞர் கொலை

தி.மலை மாவட்டம் செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அப்சல் (22) கஞ்சா விற்பனை தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இரு சிறார்கள், கல்லூரி மாணவர் உட்பட 16 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிறார்கள் கடலூர் சீர்திருத்தப் பள்ளிக்கும், மற்றவர்கள் வேலூர் மத்திய சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.
Similar News
News September 9, 2025
தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

தி.மலை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News September 9, 2025
“கிராம உதவியாளா் பணிகளுக்கான திறனறிவுத் தோ்வு”

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கான திறனறிவுத் தோ்வு (செப்.08) தொடங்கியது. “இதில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் முதற்கட்டமாக வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தோ்வு வட்டாட்சியா் சு.மோகனராமன் முன்னிலையில் தொடங்கியது. இந்த தோ்வுப் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். முதற்கட்டமான தோ்வு வரும் செப். 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
News September 9, 2025
தி.மலையில் மக்கள் குறைதீா் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் (செப்.08) நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 566 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம்
வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.