News September 8, 2025
சிவகங்கையில் இன்று முதல் கனமழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று(செப்.8) முதல் நாளை மறுநாள் (செப்.10) வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று, நாளை தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், நாளை மறுநாள் தேனி, மதுரை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT
Similar News
News September 9, 2025
சிவகங்கை: உளவுத்துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 9, 2025
சிவகங்கை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

சிவகங்கை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
சிவகங்கையில் வீடு புகுந்து செயின் பறிக்க முயற்சி

சிவகங்கை அருகே வண்டவாசியை சேர்ந்தவர் தனஸ்ரீ(22). இவர் வீட்டில் குழந்தையுடன் இருந்த போது ஒரு பெண் தண்ணீர் கேட்டு வந்துள்ளார். தண்ணீர் கொடுத்தபோது அந்த பெண் தனஸ்ரீ கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட தனஸ்ரீ வீட்டின் கதவை மூடினார்.கதவை திறக்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவதாக அப்பெண் மிரட்டிய நிலையில் கதவை திறந்த நிலையில் அவர் தப்பியோடினார்.