News September 8, 2025
சேலம்: மக்களே எச்சரிக்கை இதை செஞ்சிடாதீங்க!

சேலம் மக்களே உங்களது வங்கி ஆவணங்கள் காலாவதியாகிவிட்டதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற குறுஞ்செய்திகள் மோசடி கும்பலால் அனுப்பப்படுபவை. வங்கிகள் இத்தகைய குறுஞ்செய்திகளை அனுப்பாது. எனவே பொதுமக்கள் இது போன்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சேலம் மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News September 9, 2025
சேலத்தில் இன்றைய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேலத்தில் இன்று(செப்.9) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்: ▶️அம்மாபேட்டை மண்டலம் ஐயா சாமி பூங்கா அருகில் உள்ள அபி மஹால் திருமண மண்டபம்▶️ சங்ககிரி ரெட்டியூர் ஸ்ரீ ஆதிசேச திருமண மண்டபம் ▶️எடப்பாடி பச்சையம்மாள் திருமண மண்டபம் ▶️ஆட்டையாம்பட்டி கைலாசம்பாளையம் புதூர் செங்குந்தர் திருமண மண்டபம் ▶️மேச்சேரி எம் எஸ் எஸ் மஹால் மல்லிகுந்தம் ▶️ஆத்தூர் ஸ்ரீ லட்சுமி தாரணி திருமண மண்டபம் மல்லிய கரை
News September 9, 2025
சேலத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

சேலம் – நாமக்கல் அருகே சாணாரப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் தினேஷ் (19) ஆகியோர் நேற்று(செப்.8) மோட்டார் சைக்கிளில் ஜலகண்டாபுரத்தில் இருந்து நங்கவள்ளி நோக்கி வந்துள்ளனர். காட்டு வளவு அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். சாலையில் கிடந்த தினேஷ் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News September 9, 2025
சேலத்தில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

▶️சேலம் மாவட்ட இணையதளம்: https://salem.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️சேலம் மாநகராட்சி: https://www.salemcorporation.gov.in/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்கள், ஆவணங்கள் போன்ற சேவைகளைப் பெறலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்: https://salem.dcourts.gov.in/website-policies/ இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகள், வழக்கு குறித்த ஆவணங்களைப் பெறலாம்.