News September 8, 2025
இறுதி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

இஸ்ரேலுடனான போர் விஷயத்தில் ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது SM பதிவில் அவர், போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் ஒப்புக்கொண்டு விட்டதாகவும், ஹமாஸும் இதனை ஒப்புக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை மறுத்தால் சந்திக்க போகும் விளைவுகளை ஹமாஸ் அமைப்புக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 10, 2025
2026 டி20 WC: எப்போது தொடங்குகிறது தெரியுமா?

ICC டி20 உலகக்கோப்பை தொடர், 2026 பிப்ரவரி 7 முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் எனவும், ஒருவேளை ஃபைனலுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால், அப்போட்டி இலங்கைக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.
News September 10, 2025
ரஞ்சி கோப்பை: TN அணி அறிவிப்பு

அக்டோபர் மாதம் தொடங்கும் ரஞ்சி கோப்பைக்கான TN அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீசன் தலைமையிலான அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா இந்திரஜித், ஷாருக் கான், விமல், சச்சின் பி, ஆண்ட்ரே சித்தார்த், அம்ப்ரிஷ், வித்யுத், சந்திரசேகர், சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், அச்யுத், ஹேம்சுதேசன், திரிலோக், அஜிதேஷ் இடம்பெற்றுள்ளனர். TN அணி ரஞ்சி கோப்பையை வென்று 37 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த அணி கோப்பையை வெல்லுமா?
News September 10, 2025
செப்டம்பர் 10: வரலாற்றில் இன்று

*1780 – பொள்ளிலூரில் திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே போர் நடந்தது. *1965 – அமிர்தசரஸை கைப்பற்ற பாக். எடுத்த முயற்சி தோல்வி. *1978 – மஞ்சு வாரியர் பிறந்தநாள். *1980 – ரவி மோகன் பிறந்தநாள். *1984 – பாடகி சின்மயி பிறந்தநாள். *2020 – வடிவேல் பாலாஜி மறைந்த நாள்.