News September 8, 2025
உழவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்: அன்புமணி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் வழங்கிய அனுமதியை திரும்ப பெற மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு TN அரசு அறிவுறுத்தியது. ஆனால் தற்போது வரை அது ரத்தாகவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உழவர்களுக்கு துரோகம் இழைக்காமல் TN அரசு அந்த அனுமதி ரத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 453 ▶குறள்: மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். ▶பொருள்: மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனதால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
News September 9, 2025
கனரா வங்கியில் வேலை.. உடனே முந்துங்க

கனரா வங்கியில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கியின் மார்க்கெட்டிங், சேல்ஸ் பிரிவில் பணி செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கான வயது வரம்பு 20-30 வரை, கல்வித் தகுதி இளங்கலை பட்டப்படிப்பு ஆகும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹22,000 வழங்கப்படும். இதற்கு https://www.canmoney.in/careers தளத்தில் விண்ணப்பியுங்கள்.
News September 9, 2025
தோனிக்கு புகழாரம் சூட்டிய ரிக்கி பாண்டிங்

தோனியின் தலைமைப் பண்பை ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசியுள்ளார். டி-20 போட்டிகளில் அழுத்தம் காரணமாக சில கேப்டன்கள் டக்அவுட்டில் பயிற்சியாளர்களிடம் ஆலோசனை கேட்பதை நாம் பார்த்திருப்போம். உதாரணமாக கில்-நெஹ்ரா. ஆனால் தோனி அப்படி செய்து ஒரு போதும் பார்த்ததில்லை என பாண்டிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் போது டக்அவுட்டில் ஆலோசனை கேட்காத ஒரே கேப்டன் தோனி மட்டுமே என்று பாண்டிங் குறிப்பிட்டார்.