News September 8, 2025
அதிமுகவை உடைக்க முடியாது: EPS

எந்த கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது என EPS தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது பேசிய அவர், அதிமுகவை எத்தனையோ பேர் உடைக்க பார்க்கிறார்கள், முடக்க பார்க்கிறார்கள் என்றார். ஆனால் அவற்றை தொண்டர்கள், மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கியதாகவும் அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட MP, MLA, CM ஆகலாம் எனவும் EPS குறிப்பிட்டார்.
Similar News
News September 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 9, ஆவணி 24 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News September 9, 2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் UAE-ல் இன்று தொடங்குகிறது. தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. ஹாங் காங்குடன் ஒப்பிடுகையில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆப்கானிஸ்தான் வலுவாக உள்ளது. எனினும் ஹாங் காங் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
News September 9, 2025
டாலருக்கு எதிராக ₹ சரிவு: FM விளக்கம்

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் உலக சூழல் என FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்து வந்தாலும், வேறெந்த நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை என்றும் அவர் கூறினார். இந்தியா மட்டுமல்ல பிறநாடுகளின் நாணயங்களுக்கும் டாலர் விஷயத்தில் அதே நிலை ஏற்படுவதாக FM குறிப்பிட்டார்.