News September 8, 2025

10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் “வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்கும் போது சாலையில் செல்லும்போது முன்னால் செல்லும் வாகனத்திற்கு 10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம். விபத்தை தவிர்ப்போம்” என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவு செய்து பரவி வருகிறது.

Similar News

News September 9, 2025

திருப்பத்தூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

BREAKING: திருப்பத்தூர்-ஊராட்சி மன்ற தலைவர் நீக்கம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கடந்த 6ம் தேதி நகை திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் திமுக-விற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இவரை இன்று (செப்.,9) கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். பாரதி மீது திருட்டு உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 9, 2025

திருப்பத்தூர்: காவல் நிலையத்தை சிறை பிடித்த பொதுமக்கள்!

image

ஆம்பூர், தட்டப்பாறை கிராமத்திலிருந்து நேற்று (செப்.,8) இரவு பாட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு விறகு ஏற்றி சென்ற ட்ராக்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குப்புராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உயிரிழந்தார். டிராக்டர் டிரைவர் விநாயகம் தப்பி ஓடிய நிலையில், அவரை கைது செய்யக்கோரி சதீஷின் உறவினர்கள் இன்று (செப்.,9) உமராபாத் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!