News September 8, 2025

சீர்காழியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு

image

சீர்காழி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு 6 இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணிக்கான தேர்வு சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் வட்டாட்சியர் அருள்ஜோதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஹரிஹரன் மேற்பார்வையில் 6 பணியிடங்களுக்கு 314 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 89 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Similar News

News September 9, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம், மணல்மேடு, பொறையார், செம்பனார்கோயில், சீர்காழி, திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

News September 9, 2025

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தொழில் முனைவோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். சுற்றுலாஆப்ரேட்டர்கள் விமான நிறுவனங்கள் உணவகங்கள் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் சுற்றுலா நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப். 15க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News September 9, 2025

மயிலாடுதுறை: பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

image

திருவெண்காடு அருகே நாங்கூரில் வண்புருஷோத்தம பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றான இங்கு பவித்ரோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் கடைசி நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. பெருமாள் நாங்கூர் மணிகர்ணிகா காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

error: Content is protected !!