News September 8, 2025

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

image

தற்போதைய வாழ்க்கை முறையில், குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விந்தணு எண்ணிக்கை குறைபாடு அதிகரித்து வருகிறது. பின்வரும் உணவு வகைகளை தவிர்த்தாலே, இந்த பாதிப்பை குறைக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள்:
★பீட்சா, இனிப்புகள், சோடா, ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும். ★அளவிற்கு அதிகமான மது, சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ★அதிக கொழுப்புள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.

Similar News

News September 8, 2025

வேளாண் விஞ்ஞானி R.S.நாராயணன் காலமானார்

image

இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான R.S.நாராயணன்(87) வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் ஆய்வாளராக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். மேலும், ‘வறட்சியிலும் வளமை’, ‘வாழ்வு தரும் வன வேளாண்மை’, ‘பல்லுயிர் பெருக்கம்’ உள்ளிட்ட ஏராளமான பயனுள்ள நூல்களை எழுதியுள்ளார். இறுதி சடங்கு பிற்பகல் 12 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது. #RIP

News September 8, 2025

RECIPE: இந்த டிபன் சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட்!

image

◆ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால், சோள இட்லி சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் உகந்தது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
➥வெள்ளைச் சோளம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
➥இவற்றை இட்லி பதத்திற்கு கிரைண்டரில் போட்டு, அரைத்து கொள்ளவும்.
➥பிறகு, 8 மணி நேரம் ஊற வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லியாக வார்த்தெடுத்தால், ருசியான சோள இட்லி ரெடி. SHARE IT.

News September 8, 2025

EPS காய் நகர்த்தலுக்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு

image

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என EPS பேசியிருந்தார். இதற்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓட்டை உடைசல்களை EPS சரி செய்துவிட்டு மற்றதைப் பற்றி யோசிக்கலாம் என விமர்சித்துள்ளார். இப்படியே சென்றால் EPS-ன் அரசியல் வாழ்க்கை ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ என்ற நிலைக்கு செல்லும் எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!