News September 8, 2025
ராசி பலன்கள் (08.09.2025)

➤ மேஷம் – கவலை ➤ ரிஷபம் – வரவு ➤ மிதுனம் – தாமதம் ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – ஆதரவு ➤ கன்னி – அசதி ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – வருத்தம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – செலவு ➤ மீனம் – பயம்.
Similar News
News September 8, 2025
ஸ்டாலின் அப்பா! என்னை காப்பாத்துங்க!

Appa என்ற ஹேஷ்டேக்குடன் X-ல் மூலம் ஸ்டாலினிடம் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். அதில், 7 மாத கர்ப்பிணியான நான், பார்வையற்ற தாயாருடன் நேரில் சென்று புகாரளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பா! உங்க அரசை என்னை போன்ற பெண்கள் நம்புகிறோம். இதில், நீங்கள் தலையிட்டு என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், எனக்கும் நீதி பெற்று தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News September 8, 2025
நாளை வெளியாகப் போகும் ஆப்பிள் ரகசியம்

ஆப்பிள் நிறுவனம் நாளை தன் அசத்தலான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. கலிபோர்னியாவில் நடைபெறும் லாஞ்ச் நிகழ்வில் ஐபோன் 17 சீரீஸ் போன்கள் அறிமுகமாக உள்ளது. இதுதவிர, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் SE, ஏர்பாட்ஸ் Pro 3 உள்ளிட்ட தயாரிப்புகளும் அறிமுகமாக உள்ளன. இவற்றின் புதிய அம்சங்கள் குறித்த விஷயங்கள் ரகசியமாகவே உள்ளன. நாளை வரை காத்திருங்கள்.
News September 8, 2025
வெளிநாட்டு பயணம் படுதோல்வி: அன்புமணி

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி அடைந்திருப்பதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். ₹15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டதில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் 89% (₹13,815) விரிவாக்கத் திட்டங்களுக்கானவை என்றும், இதனை வெளிநாடு செல்லாமல் தமிழ்நாட்டில் இருந்தே செய்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.