News September 7, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 9, 2025

கோவை: நண்பனை குத்தியவருக்கு போலீஸ் வலை!

image

கோவை நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இருவரும் நண்பர்கள். இந்நிலையில் மணிக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவப்பிரகாசம் மணியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி மணியக்காரன்பாளையம் பகுதி பேக்கரியில் நின்றிருந்த சிவப்பிரகாசத்தை கத்தியால் குத்தியுள்ளார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மணியை தேடி வருகின்றனர்.

News September 9, 2025

முன்னாள் முதல்வர் வருகையொட்டி எம்எல்ஏ ஆய்வு

image

கோவை மாவட்டத்தில் இன்று (09-09-2025) முன்னாள் முதல்வர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு, அவர் சுந்தராபுரம் பகுதியில் உள்ள சங்கம் வீதியில் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். எனவே இதற்கான முன்னேற்பாடுகளை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

News September 9, 2025

கோவை: வங்கி வேலை உடனே விண்ணப்பியுங்க.

image

கோவை: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்.<<>> அக்.6ஆம் தேதியே இதற்கு கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!