News September 7, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நாளை அவர் தமிழகம் திரும்புகிறார். அதன்பின், ஓரிரு நாள்களில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அப்டேட் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 8, 2025
ஆஸி.,யில் இதற்கெல்லாம் தடையா?

<<17646961>>மல்லிப்பூவை<<>> மட்டுமல்ல, தங்கள் நாட்டின் பல்லுயிர்ச்சூழல் அமைப்பை பாதுகாக்க எந்த அந்நிய தாவரம், விலங்கினம், உணவுப் பொருள்களையும் ஆஸ்திரேலியா அரசு அனுமதிப்பதில்லை. பூக்கள், பழம் / காய்கறிகள், மூலிகைகள், பால் பொருள்கள், இனிப்புகள், அரிசி, தேயிலை, வீட்டு உணவு, தேன், செல்லப்பிராணி உணவுகள், பாரம்பரிய மருந்துகள் உள்பட ஏராளமான பொருள்களுக்கு ஆஸி.,யில் தடை உண்டு. மீறினால் அபராதம், நடவடிக்கை நிச்சயம்.
News September 8, 2025
பிறந்த சிசுவை கடித்து குதறிய தெருநாய்கள்

தெரு நாய்கள் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், தெருநாய்களிடம் சிக்கிய பிஞ்சு குழந்தையின் தலையை தவிர மற்ற அனைத்து உறுப்புகளையும் தெருநாய்கள் தின்ற கோர சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. GH நுழைவாயில் அருகே பிறந்து ஒருநாளே ஆன, சிசுவின் உடலை தாய் குப்பையில் வீசி சென்றுள்ளார். அந்த பிஞ்சு உடலை மற்றவர்கள் மீட்பதற்குள், தெருநாய்கள் கடித்து குதறிய காட்சி, பார்ப்பவர்களின் மனதை ரணமாக்குகிறது.
News September 8, 2025
SCIENCE: உங்கள் மூளைக்கு வலி தெரியாது. ஏன் தெரியுமா?

உடலில் எங்கு வலித்தாலும், அதை மூளையால் உணரமுடிகிறது. ஆனால், மூளையில் ஏற்படும் வலி நமக்கு தெரிவதே இல்லை. ஏனென்றால், மூளையில் வலியை உணரும் ‘நோசிசெப்டர்’ நரம்புகள் இல்லை. இதனால்தான் ஒருவர் விழித்திருக்கும்போதே மூளை சர்ஜரிகளை செய்யமுடிகிறது. இது உண்மையென்றால் தலைவலி எப்படி ஏற்படுகிறது என நீங்கள் கேட்கலாம். தலை & கழுத்திலுள்ள நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாவதால்தான் தலைவலி ஏற்படுகிறது. SHARE.