News September 7, 2025
சென்னையில் சந்திரகிரகணத்தை காண 10 இடங்களில் ஏற்பாடு

இன்று ( செப்07) இரவு நீண்ட நேரம் நடைபெறும் சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க, சென்னை வானியல் குழுமம் சார்பில், 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம், கோவூர், நாவலூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்திரகிரகணம் இரவு 9.56க்கு தொடங்கி நாளிரவு 1.26க்கு முடிவடைகிறது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 8, 2025
JUST IN: சென்னையில் வலுக்கட்டாயமாக கைது

தூய்மை பணியாளர்களின் ஒப்பந்தத்தை தனியார் மையம் படுத்தக்கூடாது என கடந்த ஒரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடத்தில் போராட்டத்தை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், கொருக்குபேட்டை, அயனாவரம் பகுதியில் தூய்மை பணியாளர்களின் வீடுகளிலே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
News September 8, 2025
BREAKING: சென்னையில் ஓயாத போராட்டம்

சென்னை மண்டலம் 5,6 தூய்மை பணிகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தூய்மைப்பணியாளர்கள் பொதுவெளியில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி வழங்காத நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் 13 தூய்மைப்பணியாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
News September 8, 2025
கிண்டியில் 3 நாள் பயிற்சி! மிஸ் பண்ணிடாதீங்க

கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி செப்.17 முதல் 19 வரை 3 நாள்கள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18-வயது நிரம்பிய அனைவரும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும், 86681-02600 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)