News September 7, 2025

நாகை: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் வேலை!

image

நாகை மக்களே, காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (செப்.,8) கடைசி நாளாகும். அனைவருக்கும் இத்தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News September 8, 2025

நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

நாகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 8, 2025

நாகையில் பாஸ்போர்ட் சேவை மையம்

image

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் சேவை பெற இதுவரை திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் நாகை மாவட்டத்தில் இருந்து வெளிநாடு செல்லும் பொதுமக்கள் இளைஞர்கள் நலன் கருதி விரைவில் நாகை தலைமை தபால்நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட உள்ளதாக நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News September 8, 2025

நாகை மாவட்டத்தில் கல்விக் கடன் முகாம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடன் முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம் நாளை (செப்.9) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் மாணவர் சேர்க்கை கடிதம், மதிப்பெண் சான்று, கட்டண விவரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!