News September 7, 2025
குமரி மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் முன்பு இன்று தவெக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு கொண்டுவந்த மீனவர்களுக்கு எதிரான மீன்பிடி மசோதாவை திருப்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 8, 2025
நாகர்கோவில்: அஞ்சல் துறை மக்கள் குறைதீர் கூட்டம்

அஞ்சல் துறை சார்பாக குமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செப்.16 அன்று 11. மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது தங்கள் குறைகளை தபால் மூலமாக தெரிவிக்க வேண்டும் என குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
குமரியில் பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அசம்பு, மாறாமலை, காணிப் பெட்டி, மகேந்திரகிரி மலை பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் கடற்கரை உட்பட மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.
News September 8, 2025
குமரியில்: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

குமரி மக்களே,
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
மறக்காம ஷேர் பண்ணுங்க