News September 7, 2025

கோவை ஒபிஸ் ஆதரவாளர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவு

image

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்து விடுவித்தார். அதனை தொடர்ந்து இன்று கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் கோவையை சேர்ந்த ஒபிஸ் அணியினர் மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் 2500கும் மேற்பட்டோர் செங்கோட்டையனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.மேள தாளங்களுடன் வந்து அவரை சந்தித்தது குறிப்பிடதக்கது.

Similar News

News September 9, 2025

ஈரோடு: மின் துறையில் SUPERVISOR வேலை!

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். கடைசி தேதி 17.09.2025 ஆகும். ஈரோடு மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 9, 2025

மாவட்டத்தில் நாளை முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை முதல், 12ம் தேதி வரை, மூன்று நாட்கள் காலை, 9 முதல் மதியம், 3 மணி வரை நடக்க உள்ளது. இதன்படி நாளை, ஈரோடு சாஸ்திரி நகர், அன்னபூரணி மஹால், பெருந்துறை – விஜயபுரி ஆர்த்தி மஹால், வரும், 11 ல் ஈரோடு மாநகராட்சி மண்டலம் – 2 ல் நகராட்சி பிரதான சாலை,
சூரம்பட்டி 4 ரோடு, வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடக்க உள்ளது.

News September 9, 2025

ஈரோடு பேருந்து நிலையம் அருகே பரபரப்பு!

image

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு எதிர்புறத்தில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தலையில் காயத்துடன் அடையாளம் தெரியாத நிலையில் மீட்பு. ஈரோடு டவுன் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!