News September 7, 2025
செல்போன் ரீசார்ஜ் 1 மாதம் இலவசம்.. உடனே முந்துங்க

ஜியோவின் 9-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி <<17616667>>பல ஆஃபர்கள்<<>> அறிவிக்கப்பட்டன. அதில், ₹349 ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆஃபரும் உள்ளது. இதற்கு முன்பு ஓராண்டாக இந்த பிளானில் ரீசார்ஜ் செய்தவர்கள், MY JIO ஆப்பில் இந்த முறை இலவசமாக ரீசார்ஜ் செய்யலாம். இன்றுடன் இந்த ஆஃபர் நிறைவடைகிறது. இந்த திட்டத்தில் 28 நாள்களுக்கு தினமும் 2GB டேட்டா, 100 SMS, Unlimited calls கிடைக்கும்.
Similar News
News September 8, 2025
கணவரின் பேச்சை கேட்டு ஆட்சி செய்யும் டெல்லி CM?

டெல்லி CM ரேகா குப்தாவின் அரசு நிகழ்வுகளில் அவரது கணவர் மனிஷ் பங்கேற்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரேகா வெறும் பொம்மை எனவும் அவரை பின்னால் இருந்து இயக்குவது அவரது கணவர்தான் என்றும் ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. மேலும், வாரிசு அரசியல் செய்வதாக காங்.-ஐ சாடும் BJP-யும் அதையேதான் செய்கிறது என Ex அமைச்சர் சௌரப் பரத்வாஜ் சாடியுள்ளார். அரசியலிலுள்ள பெண்களை ஆண்கள் ஆட்டுவிப்பது பற்றி உங்கள் கருத்து?
News September 8, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம் விலை இன்று(செப்.8) காலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ₹280 குறைந்த நிலையில், மாலை நேர வர்த்தகப்படி சவரனுக்கு ₹720 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் 1 கிராம் ₹10,060-க்கும், ஒரு சவரன் ₹80,480-க்கும் விற்பனையாகிறது.
News September 8, 2025
DGP நியமன நடைமுறை என்ன?

தற்போதைய DGP பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன், DGP அந்தஸ்துக்கு தகுதியான காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு UPSC-க்கு அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் தகுதி, அவர்களின் சேவை உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு, தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசுக்கு UPSC பரிந்துரைக்கும். பின்னர் மாநில முதல்வரின் தலைமையிலான குழு பரிந்துரையை ஆய்வு செய்து இறுதியாக DGP-ஐ நியமனம் செய்யும்.