News April 10, 2024
பாமக நிர்வாகி வீட்டில் ஐ.டி. சோதனை

கடலூரில் உள்ள பாமக பொறுப்பாளர் சுரேஷ் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் தொகுதியில் பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடும் நிலையில், தேர்தல் பொறுப்பாளராக சுரேஷ் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், எருக்கன் குப்பம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Similar News
News March 22, 2026
நடுரோட்டில் பற்றி எரிந்த அரசு பஸ்

தூத்துக்குடியில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது நடந்த சம்பவத்தில், சுதாரித்த 60 பயணிகளும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 22, 2026
சிக்கிமில் லேசான நிலநடுக்கம்

சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.46 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில் ஏற்கெனவே பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 22, 2026
நிலக்கரி உற்பத்தியில் இந்தியா சாதனை

இந்தியா தொடர்ந்து 2-வது ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை எட்டி சாதனை படைத்துள்ளது. எரிசக்தி துறையில் நாடு சுயசார்பு அடைந்து வருவதற்கு இது முக்கிய சான்றாக அமைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு போதுமான அளவு பராமரிக்கப்படுவதால், அதிகரித்து வரும் நாட்டின் மின் தேவையை திறம்பட எதிர்கொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளது.


