News September 7, 2025

சசிகலாவை சீக்ரெட்டாக சந்தித்த EPS ஆதரவாளர்?

image

சிங்காநல்லூர் அதிமுக முன்னாள் MLA சின்னசாமி, சசிகலாவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடந்திருக்கிறதாம். ஆலோசனையின் போது, விரைவில் நல்லது நடக்கும் என்று சசிகலா சொன்னதாக கூறப்படுகிறது. EPS ஆதரவாளரான சின்னசாமி, சசிகலாவை சந்தித்ததால் இவர் மீதும் நடவடிக்கை பாயுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News September 9, 2025

தனியாரை நாடும் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

image

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹60 லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு கொள்முதல் நிலையங்களில் உலர்த்தும் வசதி, சாக்குப்பை இருப்பு இல்லை எனவும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறினர். அரசு கொள்முதல் நிலையங்களில் பல பிரச்னைகள் இருப்பதால், தனியாரில் குவிண்டாலுக்கு ₹2,300 கொடுத்தாலும் தாங்கள் அதை ஏற்றுக்கொள்வதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

News September 9, 2025

அப்துல் கலாம் பொன்மொழிகள்

image

*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. *துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. *நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். *சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன. *சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை.

News September 9, 2025

ஜெயிலர் 2-ல் இணைந்த பிரபலம்

image

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்துவேல் பாண்டியனின் ப்ரீக்வெல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் சிவராஜ் குமார் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை இந்த வருட இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள நெல்சன், படத்தில் இன்னும் பல பிரபலங்களை நடிக்க வைத்துள்ளாராம். இப்படத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேமியோ யார்?

error: Content is protected !!