News September 7, 2025
BREAKING: 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. அலர்ட்

தென் மாவட்டங்களில் 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 11-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. *துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. *நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். *சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன. *சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை.
News September 9, 2025
ஜெயிலர் 2-ல் இணைந்த பிரபலம்

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்துவேல் பாண்டியனின் ப்ரீக்வெல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் சிவராஜ் குமார் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை இந்த வருட இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள நெல்சன், படத்தில் இன்னும் பல பிரபலங்களை நடிக்க வைத்துள்ளாராம். இப்படத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேமியோ யார்?
News September 9, 2025
இவங்க தான் டிரம்ப் பேத்தி

US ஓபன் டென்னிஸை நேரில் காண வந்த டிரம்ப் குடும்பத்தால் சலசலப்பு ஏற்பட்டது. அதிபர் டிரம்புடன், அவரது மகள் இவான்கா, மருமகன் ஜரெட் குஷ்னர், பேத்தி அரபெல்லா ரோஸ் போட்டியை கண்டுகளித்தனர். அப்போது சர்வதேச ஊடகங்கள் மொத்தமும் 13 வயதான அரபெல்லாவை முன்னிலைப்படுத்தி காண்பித்தன. இந்நிலையில் தாத்தா டிரம்புடன் பேத்தி அரபெல்லா பேசும் வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது.